Wednesday, June 15, 2011

Brain over Mind ? Mind over Brain??

அன்பு செலுத்தும் முன் இதயத்திற்கு முன்பு மூளையைத் துணையாகக் கொள்கிறான்...இது சரியா தவறா என்கிற வாதத்தை விட, அத்தகைய மனிதனுக்கு தோல்விகள் பகையாளிகள் ஆகின்றன என்பது ஒரு நிதர்சனமான உண்மை.

இவ்வாறில்லாமல் தன்னைப் பற்றிய அனைத்து நிகழ்வுகளையும் உரிமையோடும் நம்பிக்கையோடும் மற்றவரிடம் பகிரும் போது, மற்றவர் தன்னையல்லாமல் வேறொருவரிடம் அங்ஙனம் பழகுவதை உணருவது நட்புத் தோல்வியா? (உன்னை நம்பி சொல்லிருந்தேன் நீயே என்னை இப்படி ??? இதுல நம்பிக்கை நிறைய விளையாடும் )

இல்லை தான் நண்பராக நினைப்பவரிடம் செலுத்தும் அன்பில் அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகள் எட்டிப்பார்க்கும் போது அடைவது நட்புத் தோல்வியா?

(எதிர்பார்ப்பு - இது இருக்கணுமா வேண்டாமா என்பது இன்னொரு விவாதம் -- இல்லை பெரிய சர்ஜை)
சில செய்தி நமது மூளைக்கு புரியும் மனதுக்கு புரியாது
சில செய்தி மனதுக்கு சரியாக இருக்கும் ஆனால் புத்தி சரி இல்ல இல்லைன்னு சொல்லும்.
இப்படி இருக்க மனது சொல்லவதை கேட்பதா இல்லை புத்தி சொல்லுவதை செய்வதா?
இப்படி பல பல சந்தர்பங்களில் எல்லாரும் (நானும்தான் ) சிக்கியது உண்டு ....

1 comment:

  1. ஆஹா இங்கப்பாருய்யா........

    ReplyDelete