Friday, June 10, 2011

அறியாத வயசு (1996)


இது சிரிக்க  வேண்டிய  செய்தி இல்லை.சொல்லறது கேளு நிஷா ..தோழிகள் அனைவரும் அவளை சூழ்ந்து கொண்டோம்.

எனது நாட்டில் தமிழ் இரண்டாம் மொழியாக (இந்திய மாணவர்கள் கண்டிப்பாக தமிழ் படிக்கவேண்டும்)  தினமும் 25 நிமிடங்கள் வகுப்புஅப்போது கண்டிப்பாக தமிழில் மட்டும்  பேசவேண்டும் )

நிஷா,அவளது அப்பா மலாய் இனத்தை சேர்த்தவர்,தாயார் பஞ்சாபி. கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும் சொல்லுவாங்க இல்லையா அதுதான் நிஷா.

Secondary 2 வகுப்பில் வரும் வரைக்கும் தமிழில் திணறியவள் பிறகு  சற்று உயர்ந்து நல்ல தமிழில் கதை ,கட்டுரை அளவு வந்தது எங்களுக்கு பெரிய  ஆச்சரியம். பின்னே இருக்காதா? நாலு வருஷமா நாங்க கஷ்டபட்டு கற்பித்து,(அந்த இம்சைய சொல்லுறதுக்கு நாலு மணிநேரம் வேனும் ) தோல்விதான்  எங்களுக்கு மிச்சம் ! இவ எப்படி திடீர்னு இப்படி பேசுறது ,எழுதறதுன்னு அமர்க்களம்  !

அப்புறம்தான் வந்தது தகவல்.
எங்க தோழன் ரூபன் தான் அம்மணியின் குரு என்று.இருவரும் காதல் வலையில் (எப்படித்தான் நடந்துச்சுன்னு இதுவரைக்கும் தெரியலை) சிக்கி இருந்து ,ரூபன் "நிஷா நீ என்னை திருமணம் செய்யணும் 
(எப்படித்தான் திருமணம் அளவுக்கு போனான்னு புரியலை!!?? கவனிக்க வயது: 15  ) என்றால் கண்டிப்பா தமிழ் படிக்கணும் இல்லைனா குறைந்த பட்சம் பேசணும். 

என்னை வளர்த்த பாட்டிக்கு தமிழ் மட்டும்தான் தெரியும்,சோ ...நீ என்னிடம் தமிழ் கற்றுகோ சீக்கிரமா....

இதை அறியா பருவ காதல் சொல்லுறதா இல்ல "தெய்வீக அன்பு சொல்லுறதா தெரியாது , இப்போ இருவரும் சேர்ந்து இல்ல இருந்தாலும் இதுல ஒரு நன்மை நடந்துச்சு .

நிஷா தற்போது ஒரு பாலர் பள்ளி ஆசிரியை , அதுவும் தமிழ் ஆசிரியை  :=) 



ஏதோ ஒன்னு நல்லதா வந்துச்சே 


2 comments:

  1. ஓ நிஷா ஓ நிஷா ஓ ஓ நிஷா
    ச்ச எனகும் மலாய் கத்துக்கணும் ஐடியா குடு ஜெயா :)

    ReplyDelete
  2. ஹ்ம்ம் இல்ல அருண் இப்போ அவங்க நல்ல தமிழ் த்ன் பேசுறாங்க , சோ சோ நீ நீ நீ நல்லா தமிழ் பேச கத்துக்கோ.....
    (எஹ்ஹிஹி )

    ReplyDelete