Wednesday, June 22, 2011

நேற்று நடந்தது ...

காலையில்

எப்போவது நேரம் கிடைக்கும் போது டிபன் எடுத்து போவேன் (இட்லி ,தோசை) சென்ற வாரம் இட்லி , இன்னிக்கு தோசை , என்ன கூட  இருக்கிற சீனா பொண்ணு, "ஒ ஜி(என்னோட பேரு அவளுக்கு அப்படித்தான் வரும் )
what is this item? "is it pancake? No hao its "dosai, remember i had the same kind last week, but that was steamed, this is sort of baked.
So how do u all do this?

ஹ்ம்ம் என்ன கொடுமை ,எதுக்கு இவ பார்த்து தொலைச்சனு (நிறையா முறை சொல்லிட்டேன் செய்முறை ,தேவையான பொருள்)
மறுபடியும் , சரி சொல்லலாம்னு , அதே மாவுதான் ஒண்ணு அவியல் ,இன்னொரு முறை எண்ணெய் ஊற்றி செய்யணும்னு.


'oh that is all rite. u guys use the same flour and do label it differently , that is good!

Yes, Sort of.

மாலையில்

ஒண்ணுமில்ல.. நான் ஆபீஸ் முடிச்சுட்டு டாக்ஸி பார்த்துகிட்டு இருந்தேன், அப்போ (நம் இந்தியர்தான் )

சும்மா சொல்லகூடாது ..அட ஒண்ணுமில்ல நிஜமா  ... முடி இல்லாத தலையை  ( அந்த தலையில் உண்மையா) சின்ன ஒரு ஹேர் brush வச்சு வாரி , அதை விட கொடுமை என்கிட்டே வந்து முகம் பார்க்கிற கண்ணாடி இருக்குமா நு கேட்டுட்டாரு!



இடுப்பு வரை முடி இருக்கிற நான் கூட என்னோட பையில் ஒரு சீப்பு கூட வச்சுகிட்டது இல்லையின்னு ரொம்ப ரொம்ப நேற்று பீல் ஆயிட்டேன்.

Wednesday, June 15, 2011

Brain over Mind ? Mind over Brain??

அன்பு செலுத்தும் முன் இதயத்திற்கு முன்பு மூளையைத் துணையாகக் கொள்கிறான்...இது சரியா தவறா என்கிற வாதத்தை விட, அத்தகைய மனிதனுக்கு தோல்விகள் பகையாளிகள் ஆகின்றன என்பது ஒரு நிதர்சனமான உண்மை.

இவ்வாறில்லாமல் தன்னைப் பற்றிய அனைத்து நிகழ்வுகளையும் உரிமையோடும் நம்பிக்கையோடும் மற்றவரிடம் பகிரும் போது, மற்றவர் தன்னையல்லாமல் வேறொருவரிடம் அங்ஙனம் பழகுவதை உணருவது நட்புத் தோல்வியா? (உன்னை நம்பி சொல்லிருந்தேன் நீயே என்னை இப்படி ??? இதுல நம்பிக்கை நிறைய விளையாடும் )

இல்லை தான் நண்பராக நினைப்பவரிடம் செலுத்தும் அன்பில் அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகள் எட்டிப்பார்க்கும் போது அடைவது நட்புத் தோல்வியா?

(எதிர்பார்ப்பு - இது இருக்கணுமா வேண்டாமா என்பது இன்னொரு விவாதம் -- இல்லை பெரிய சர்ஜை)
சில செய்தி நமது மூளைக்கு புரியும் மனதுக்கு புரியாது
சில செய்தி மனதுக்கு சரியாக இருக்கும் ஆனால் புத்தி சரி இல்ல இல்லைன்னு சொல்லும்.
இப்படி இருக்க மனது சொல்லவதை கேட்பதா இல்லை புத்தி சொல்லுவதை செய்வதா?
இப்படி பல பல சந்தர்பங்களில் எல்லாரும் (நானும்தான் ) சிக்கியது உண்டு ....

Friday, June 10, 2011

அறியாத வயசு (1996)


இது சிரிக்க  வேண்டிய  செய்தி இல்லை.சொல்லறது கேளு நிஷா ..தோழிகள் அனைவரும் அவளை சூழ்ந்து கொண்டோம்.

எனது நாட்டில் தமிழ் இரண்டாம் மொழியாக (இந்திய மாணவர்கள் கண்டிப்பாக தமிழ் படிக்கவேண்டும்)  தினமும் 25 நிமிடங்கள் வகுப்புஅப்போது கண்டிப்பாக தமிழில் மட்டும்  பேசவேண்டும் )

நிஷா,அவளது அப்பா மலாய் இனத்தை சேர்த்தவர்,தாயார் பஞ்சாபி. கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும் சொல்லுவாங்க இல்லையா அதுதான் நிஷா.

Secondary 2 வகுப்பில் வரும் வரைக்கும் தமிழில் திணறியவள் பிறகு  சற்று உயர்ந்து நல்ல தமிழில் கதை ,கட்டுரை அளவு வந்தது எங்களுக்கு பெரிய  ஆச்சரியம். பின்னே இருக்காதா? நாலு வருஷமா நாங்க கஷ்டபட்டு கற்பித்து,(அந்த இம்சைய சொல்லுறதுக்கு நாலு மணிநேரம் வேனும் ) தோல்விதான்  எங்களுக்கு மிச்சம் ! இவ எப்படி திடீர்னு இப்படி பேசுறது ,எழுதறதுன்னு அமர்க்களம்  !

அப்புறம்தான் வந்தது தகவல்.
எங்க தோழன் ரூபன் தான் அம்மணியின் குரு என்று.இருவரும் காதல் வலையில் (எப்படித்தான் நடந்துச்சுன்னு இதுவரைக்கும் தெரியலை) சிக்கி இருந்து ,ரூபன் "நிஷா நீ என்னை திருமணம் செய்யணும் 
(எப்படித்தான் திருமணம் அளவுக்கு போனான்னு புரியலை!!?? கவனிக்க வயது: 15  ) என்றால் கண்டிப்பா தமிழ் படிக்கணும் இல்லைனா குறைந்த பட்சம் பேசணும். 

என்னை வளர்த்த பாட்டிக்கு தமிழ் மட்டும்தான் தெரியும்,சோ ...நீ என்னிடம் தமிழ் கற்றுகோ சீக்கிரமா....

இதை அறியா பருவ காதல் சொல்லுறதா இல்ல "தெய்வீக அன்பு சொல்லுறதா தெரியாது , இப்போ இருவரும் சேர்ந்து இல்ல இருந்தாலும் இதுல ஒரு நன்மை நடந்துச்சு .

நிஷா தற்போது ஒரு பாலர் பள்ளி ஆசிரியை , அதுவும் தமிழ் ஆசிரியை  :=) 



ஏதோ ஒன்னு நல்லதா வந்துச்சே 


நட்பான உறவுகளே..



எல்லோரின் வாழ்க்கையிலும் எட்டிப்பார்க்கும் பருவ வயதின் பனிப்போர் "காதல்"..

சிலருக்கு அது இனிமை ,பலருக்கு அது கொடுமை ,இருந்தாலும் பலவிதமான பாடங்களை கற்பித்து செல்லும்..
 
என் வாழ்வில் இதுவரை அப்படி நடக்கவில்லை (அது நான் வளர்ந்த விதம்,இருப்பிடம்,நாடு ,குடும்பம்) எப்படி சொல்லுறது ?

அதைவிட என்னை பாதித்த சில சம்பவங்களாக கூட இருக்கலாம்.
நான் முதல் முதலாக என்ன எழுதலாம் (கிறுக்கலாம்) என்று நட்புகளிடம்
கேட்டேன், அவர்கள் சொன்னது "ஹ்ம்ம் உனக்கு பிடித்தது ,ரசித்தது ,பாதித்தது இப்படி எதாவது எழுதி "ஸ்டார்ட்" பண்ணு ஜெய் ,

(இது எனது முதல் கிறுக்கல்,யாரையும் மனம் புண்பட செய்யும் நோக்கம் இல்லை,நான் பார்த்த,கடந்து வந்த சில சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நான் சிங்கையில் பிறந்து வளர்த்தவள்,தமிழ் எனக்கு இரண்டாம் மொழி .எனது தமிழில் பிழைகள் காணலாம், மன்னிக்கவும்.)
  

என்னை பாதித்த,சிந்திக்கவைத்த,சிரிக்கவைத்த,அழவைத்த ,ஆஹா சொல்லவைத்த சில சம்பவங்களை வரும் வாரங்களில் சொல்லபோகிறேன்.

Few favourite snaps





என்னை கவர்ந்த சில புகைப்படங்கள்

Thursday, June 9, 2011

Daily Colors

Dress Color to wear: 


Monday : White


Tuesday: Pink


Wednesday: Blue


Thursday: Yellow


Friday: Green

Saturday: Brown


Sunday: Black


Colors play a very important role in our daily life, the shades above do attract wellness (Do try out)

Archer's

Hello Friends

This is my very first blog; hope to get started off.